Posts

தனிமையின் காத்திக் உணர்வு - சித்தாரா 1984 தெலுங்கு

Image
ஒரு திரைக்கதையை வெறும் காகிதத்திலிருக்கும் எழுத்துக்களாக மட்டும் பார்க்காமல், அதை மனித வாழ்வியலின் பிரதிபலிப்பாகப் பார்க்க உதவுபவன் ஒரு நல்ல படைப்பாளி. இந்திய தெலுங்கு சினிமாவின் முக்கியமான இயக்குனர் வம்சி. முதலில் இந்த கதையை ஒரு நாவலாக எழுதி பின்னர் அவரே இயக்கி திரைப்படமாக எடுத்து ஏகப்பட்ட பாராட்டுக்களை இந்த படத்துக்காக வாங்கிக்கட்டிக்கொண்டார். கமர்ஷியலாகவும் பேய்மழை. இளையராஜா இசை. கோதாவரி நதிக்கரையோரம் நடக்கும் கதை. அடிக்கடி "வென்னெல்லோ கோதாரி அந்தம்" பாடலை கேட்பதுண்டு. இதன் தமிழ் பதிப்பை விட தெலுங்கில் கேட்பது எனக்கு பிடிக்கும். அட்டகாசமான பாடல். படமும் சிறப்பாக இருக்கும். எஸ். ஜானகியின் குரல் மேஜிக் செய்திருக்கும் பாட்டு. படம் எடிட்டிங் செய்யப்பட்டு முதல் பிரதி தயாரான போது, அதன் நீளம் மிக அதிகமாக இருந்திருக்கிறது. தயாரிப்பாளர் நாகேஸ்வர ராவ் கவலைப்பட்டாலும், படத்தை பார்த்த திரையுலக விநியோகஸ்தர்கள் சிலர், "எடிட்டிங் மோசம்! படம் மிக மெதுவாக நகர்கிறது, ஓடாது" என்று கூறிவிட்டார்கள். வந்தார் இளையராஜா. படத்தின் எடிட்டிங் மீது கைவைக்காமல், படத்தொகுப்பின் தாளத்திற்கு இணங...

வெற்றிடத்தின் பிரதிபலிப்பு - Spirited Away 2001

Image
  சிஹிரோ என்ற சிறுமி அவள் அம்மா அப்பாவுடன் புதிய வீட்டிற்கு செல்கிறாள். அந்த பயணத்தில் ஒரு மர்மமான உலகிற்குள் தவறுதலாக நுழைகிறாள். அந்த உலகம் சாதாரண மனிதர்களுக்கானது அல்ல. ஆவிகளின் உலகம். அங்கே மனிதர்கள் விதிகளை மீறினால் தங்கள் உருவத்தையும் அடையாளத்தையும் இழக்க நேரிடும். சிஹிரோவின் பெற்றோர் பேராசையால் பன்றிகளாக மாறிவிடுகிறார்கள். பேராசை மனிதனை மிருகமாக மாற்றும் என்பதை காட்டி குறியீட்டு திரைக்கதையை ஆரம்பிக்கும் படம் அதற்கப்பால் அடுத்தடுத்த காட்சிகளில் ஆயிரக்கணக்கான குறியீடுகளை வைத்து நகர்கிறது. சிஹிரோ தனது பெற்றோரை மீண்டும் மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த ஆவி உலகில் வேலை செய்ய ஆரம்பிக்கிறாள். யுபாபா என்ற சக்திவாய்ந்த சூனியக்காரியின் மாளிகையில் வேலைக்கு சேருகிறாள். யுபாபா என்பது அதிகாரம். கட்டுப்பாடு மற்றும் பேராசையை குறிக்கும் ஒரு பாத்திரம். அந்த மாளிகை ஒரு bathhouse. மனித சமுதாயத்தின் ஒரு சின்னமாக உள்ளது. அங்கே வரும் ஒவ்வொரு ஆவியும் மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது. சிலர் சுத்தமாக இருப்பார்கள். சிலர் மாசாக இருப்பார்கள். சிலர் தனிமையில் தத்தளிப்பார்கள். சிஹிரோ அ...

வண்ணமயமான திரைப்பட காவியம் - 2026 Cannes Film Festival

Image
கான் திரைப்பட விழா அமைப்பு 2026 போட்டியிடும் 21 படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. அத்தனை படங்களையும் இம்முறை பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய பத்து படங்களென நானொரு பட்டியல் போட்டிருக்கிறேன். தடைசெய்யப்பட்ட இயக்குனரான ஆன்ரே ஸ்வியகின்ஸேவின் MINOTAUR என்றொரு ரஷ்ய திரைப்படம். ஒரு தொழிலதிபர் தனது தொழிலிலும் குடும்பத்திலும் ஒரேநேரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி. அதிலிருந்து வெளிவரும் அரசியல் தான் கதை. லாட்வியாவில் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனரின் முந்தைய படமான LEVIATHAN எனக்கு மிகவும் பிடித்த படம் என்பதால் இதை மிகவும் உற்றுநோக்குகிறேன். இந்த இயக்குனரின் ஒவ்வொரு படமும் புட்டின் ஆட்சியின் மீதான கடுமையான விமர்சனமாக இருக்கும் . ஜேவியர் பார்டெம் நடித்திருக்கும் THE BELOVED. ஒரு பிரபல இயக்குனர் சஹாரா பாலைவனத்தில் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது தனது மகளை சந்திப்பதால் ஏற்படும் உறவு சிக்கல்களை பற்றிய கதை. ஸ்பானிஷ் சினிமாவின் ஒரு உளவியல் திரில்லர் கதை. நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர் தாமஸ் மன் இடிபாடுகள் கிடக்கும் ஜெர்மனி சாலைகளில் அ...

புடாக்கு கம்பி - சிறுகதை

Image
கொட்டிவாக்கத்தின் கடற்கரை, சென்னையின் பரபரப்பிற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு தனி உலகம். ஒருபுறம் பளபளக்கும் நவீன பங்களாக்கள், மறுபுறம் கொட்டிவாக்கத்தின் குப்பம். புதிதாக கட்டப்பட்ட ரசனையான வீடுகளும் இருக்கும் அதனுள் கடற்கரைக் உப்புக் காற்றில் தேய்ந்த பழங்கால வீடுகளும் இருக்கும். தேய்மான வீடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தெருக்களுக்குள் நடக்கும் போது இந்த பழமையை ரசித்தபடி தான் நடப்பேன் . பழைய ஜன்னல் டிசைன்கள் , வாசற்கதவுகள் , கூரைகள் , பால்கனிகள், கொள்ளைப்புறங்கள் என்று திருவான்மியூர் குப்பத்திலும் இதுபோல அழகிய பழமையான வீடுகள் இருக்கிறது . அவ்வப்போது வாடகைக்கு கேட்டுப்பார்ப்பேன் . கட்டுப்படி ஆகாது . கொட்டிவாக்கதில் கடற்கரையை ஒட்டி உள்ள பதினைந்தாவது பிரதான சாலையின் கடைசியில், ராசு தெருவில் , கடல் அலைகள் மோதுகின்ற சத்தத்திற்கு மிக அருகில் இருந்தது அந்த 'பச்சை வீடு'. அந்த வீட்டைச் சுற்றி ஒரு மர்மம் எப்போதும் நிலவி வந்தது. உரிமையாளர் சேகர். தனிவீடுகளுக்கு நடுவில் அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழைய பங்களா வீடு. அந்த வழியாக செல்லும் எவரையும் அழகில் கவர்ந்து இழுத்து ஒர...

நேரடியாக பேசும் திரைக்கதை - Crime 101 USA

Image
டான் வின்ஸ்லோவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். நாவலை படிக்கவில்லை. படித்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறன் என்றால் படத்தின் கதை மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒருவன் மைக் டேவிஸ். திருடன். 101 என்ற சாலையை பயன்படுத்தி திருட்டுத் தொழில் செய்து வருபவன். மற்றொருவன் லுப்ஸ்னிக். காவல் துறையில் உள்ள ஒரு நேர்மையான டிடெக்டிவ். மூன்றாமவள் ஷரோன் கோல்வின். ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண். திருடுபோன ஆபரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவள். மூவரையும் இணைக்கும் பாலமாக ஓர்மன் என்ற மனநிலைப் பிறழ்வு கொண்ட இளைஞன் வருகிறான். திரைக்கதை நம்மை நேரடியாகக் கதைக்குள் தள்ளி விடுகிறது. ஒரு திரைக்கதை அதை தான் செய்யவேண்டும் என்று நினைப்பேன். “தயவுசெய்து அதை செய் என்பேன்”. சில சினிமா நடிகர்கள் சிவனிடம் நேரடியாக பேசுவார்கள். நான் ஒரு படத்தின் திரைக்கதையுடன் நேரடியாக பேசுபவன். மைக், ஒரு திருட்டை அரங்கேற்றும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. அதுவும் பார்ட் லைட்டன் இயக்கத்தில். ரசனையுடன் ஆரம்பித்த படம் ரசிக்கும்படி இருந்ததே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது...

குடும்பஸ்தனின் துரோகம் - சிறுகதை

Image
சென்னை திருவான்மியூரின் கடற்கரை ஓரம் தான் என்னுடைய வீடு இருக்கிறது. என்னுடைய வீட்டில் இருந்து நூறு மீட்டர் நடந்தால் கடல் வந்துவிடும். ஸ்ரேயா எனது பள்ளிக்கூட காதலி. நான் அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன். அவள் என்னை பார்த்துக்கொண்டே இருப்பாள். இதுதான் காதல். யாருமில்லாத பள்ளிக்கூட தளங்களில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு கடலை வறுப்பது காதல் அல்ல. செக்கில் ஆட்டிய எண்ணெயாக வழிவது காதல் அல்ல. கரண்ட் ஷாக் ஏற்றிவிட்டு மேடையில் கொக்கரக்கொக்கரக்கோ என்று ஆடுவது காதல் அல்ல . நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. இதுதான் காதல். அப்படியொரு காதல். என்னை பற்றி எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறாள். “கண்ணா, ஏன் என்னை பார்த்து முறைத்துக்கொண்டே இருக்கிறான்?” என்று கேட்டிருக்கிறாள். “அவன் முறைப்பது எனக்கு பயமாக இருக்கிறது” என்று என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாள். நான் தான் காதல் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். முறைக்கிறேனாம். நான் பயங்கரமாக காதலித்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்திருந்தேன். அதோடு கண்கள் பார்த்து மட்டுமல்ல காதலிப்பதையே நிறுத்திவிட்டேன். “இதுதான் காதல் என்பதா? இளமை கொஞ்சி நிற்பதா? காற்றின் காற்றி...

தூத்துக்குடி கொத்தனார் ஆதிமூலம் - Kumari 2022 Malayalam

Image
நாரணத்து பிராந்தன் ஒரு ஞானி, ஆனால் உலகம் அவரை ஒரு 'பைத்தியமாக' பார்த்தது. தினமும் காலையில் ஒரு மிகப்பெரிய பாறையை உருட்டிக்கொண்டு ஒரு மலையின் உச்சிக்குச் செல்வார். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறையை கீழே தள்ளிவிடுவார். அது உருண்டு ஓடுவதைப் பார்த்து கைகளைத் தட்டிச் சிரிப்பார். மனிதர்கள், பாறையை மேலே உருட்டுவது போல, தங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செல்வம், புகழ் என எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பாறை கீழே விழுவது போல, விதி அனைத்தையும் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. இதை நினைத்து கவலைப்படாமல் சிரிப்பதே ஞானம் என்பது அவர் உலகிற்குச் சொன்ன பாடம். மித் ஆப் ஸிஸிபஸ் என்ற கிரேக்கத்தின் தொன்ம கதாபாத்திரத்தை ஒட்டி காம்யூ ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதுவும் இதே துன்பம் வரும் போது ஜாலியாக இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தை இதே போன்றதொரு ஸிஸிபஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை வைத்துதான் எழுதியிருப்பார். ஒருமுறை ' எமன், நாரணத்து பிராந்தனை பிடிக்க வந்தபோது, அவரின் அறிவைக் கண்டு வியந்து, வரம் ஒன்றை கேட்க சொன்னாராம். அதற்கு "என் இடது காலில் உள்ள வீக்கத்தை வலது கா...