Posts

Showing posts from March, 2026

நேரடியாக பேசும் திரைக்கதை - Crime 101 USA

Image
டான் வின்ஸ்லோவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். நாவலை படிக்கவில்லை. படித்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறன் என்றால் படத்தின் கதை மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒருவன் மைக் டேவிஸ். திருடன். 101 என்ற சாலையை பயன்படுத்தி திருட்டுத் தொழில் செய்து வருபவன். மற்றொருவன் லுப்ஸ்னிக். காவல் துறையில் உள்ள ஒரு நேர்மையான டிடெக்டிவ். மூன்றாமவள் ஷரோன் கோல்வின். ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண். திருடுபோன ஆபரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவள். மூவரையும் இணைக்கும் பாலமாக ஓர்மன் என்ற மனநிலைப் பிறழ்வு கொண்ட இளைஞன் வருகிறான். திரைக்கதை நம்மை நேரடியாகக் கதைக்குள் தள்ளி விடுகிறது. ஒரு திரைக்கதை அதை தான் செய்யவேண்டும் என்று நினைப்பேன். “தயவுசெய்து அதை செய் என்பேன்”. சில சினிமா நடிகர்கள் சிவனிடம் நேரடியாக பேசுவார்கள். நான் ஒரு படத்தின் திரைக்கதையுடன் நேரடியாக பேசுபவன். மைக், ஒரு திருட்டை அரங்கேற்றும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. அதுவும் பார்ட் லைட்டன் இயக்கத்தில். ரசனையுடன் ஆரம்பித்த படம் ரசிக்கும்படி இருந்ததே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது...

குடும்பஸ்தனின் துரோகம் - சிறுகதை

Image
சென்னை திருவான்மியூரின் கடற்கரை ஓரம் தான் என்னுடைய வீடு இருக்கிறது. என்னுடைய வீட்டில் இருந்து நூறு மீட்டர் நடந்தால் கடல் வந்துவிடும். ஸ்ரேயா எனது பள்ளிக்கூட காதலி. நான் அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன். அவள் என்னை பார்த்துக்கொண்டே இருப்பாள். இதுதான் காதல். யாருமில்லாத பள்ளிக்கூட தளங்களில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு கடலை வறுப்பது காதல் அல்ல. செக்கில் ஆட்டிய எண்ணெயாக வழிவது காதல் அல்ல. கரண்ட் ஷாக் ஏற்றிவிட்டு மேடையில் கொக்கரக்கொக்கரக்கோ என்று ஆடுவது காதல் அல்ல . நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. இதுதான் காதல். அப்படியொரு காதல். என்னை பற்றி எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறாள். “கண்ணா, ஏன் என்னை பார்த்து முறைத்துக்கொண்டே இருக்கிறான்?” என்று கேட்டிருக்கிறாள். “அவன் முறைப்பது எனக்கு பயமாக இருக்கிறது” என்று என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாள். நான் தான் காதல் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். முறைக்கிறேனாம். நான் பயங்கரமாக காதலித்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்திருந்தேன். அதோடு கண்கள் பார்த்து மட்டுமல்ல காதலிப்பதையே நிறுத்திவிட்டேன். “இதுதான் காதல் என்பதா? இளமை கொஞ்சி நிற்பதா? காற்றின் காற்றி...

தூத்துக்குடி கொத்தனார் ஆதிமூலம் - Kumari 2022 Malayalam

Image
நாரணத்து பிராந்தன் ஒரு ஞானி, ஆனால் உலகம் அவரை ஒரு 'பைத்தியமாக' பார்த்தது. தினமும் காலையில் ஒரு மிகப்பெரிய பாறையை உருட்டிக்கொண்டு ஒரு மலையின் உச்சிக்குச் செல்வார். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறையை கீழே தள்ளிவிடுவார். அது உருண்டு ஓடுவதைப் பார்த்து கைகளைத் தட்டிச் சிரிப்பார். மனிதர்கள், பாறையை மேலே உருட்டுவது போல, தங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செல்வம், புகழ் என எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பாறை கீழே விழுவது போல, விதி அனைத்தையும் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. இதை நினைத்து கவலைப்படாமல் சிரிப்பதே ஞானம் என்பது அவர் உலகிற்குச் சொன்ன பாடம். மித் ஆப் ஸிஸிபஸ் என்ற கிரேக்கத்தின் தொன்ம கதாபாத்திரத்தை ஒட்டி காம்யூ ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதுவும் இதே துன்பம் வரும் போது ஜாலியாக இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தை இதே போன்றதொரு ஸிஸிபஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை வைத்துதான் எழுதியிருப்பார். ஒருமுறை ' எமன், நாரணத்து பிராந்தனை பிடிக்க வந்தபோது, அவரின் அறிவைக் கண்டு வியந்து, வரம் ஒன்றை கேட்க சொன்னாராம். அதற்கு "என் இடது காலில் உள்ள வீக்கத்தை வலது கா...

வெள்ளைக்காரன் மூக்குப்பொடி - சிறுகதை

Image
நண்பன் ஒருவன் ஞாயிறு அன்று “சுடச்சுட இட்லியும் சுடச்சுட சிக்கன் குழம்பு செய்து வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வா. இரவு எத்தனை மணி ஆனாலும் பரவாயில்லை” என்றான். நான் “வேலை இருக்கிறது” என்றேன். “நானே வந்து அழைத்து வரவா?” என்றான். சென்றவாரம் “பீஃப் சூப்பரா சமைப்பேன். உனக்காக ஒரு ஞாயிறு அன்று சமச்சுவச்சிட்டு அழைக்கிறேன்” என்றான். நானும் எப்போது அழைக்கிறான் பார்க்கலாம் என்று வேலையை பார்த்தேன். ஒருவாரம் ஆனது. இரண்டு வாரம் ஆனது. இப்போது மூன்று மாதத்திற்கு பின்னர் அழைத்து “சிக்கன் குழம்பு செஞ்சு வச்சிருக்கிறேன்” என்கிறான். அடியில் அவனுக்கு எவ்வளவு இருக்கும்? இவ்வளவு நாட்களும் பீஃப் குழம்பு அவன் செய்யாமல் இல்லை. அதை சமைத்த போது எல்லாம் வேறு ஒரு நண்பர் கூட்டத்தை அழைத்து எனக்கு தெரியாமல் விருந்து வைத்திருக்கிறான். ஆனால் இப்போது சிக்கன் குழம்பு வைத்து விட்டு என்னை அழைக்கிறான். எனக்கு வேறொருவன் மூலமாக செய்தி வந்தது. பீஃப் சமைக்கும் பொழுது ஏன் என்னை அழைக்க மாட்டேன் என்கிறான்? சமீபத்தில் வீடு மாறியிருக்கிறான். என்னிடம் சொல்லவே இல்லை. அதனால் தான் இப்போது சிக்கன் குழம்பு சமைத்துவிட்டு அழைத்ததற்கு நான் சொ...

சாவுக்கப்பால் - சிறுகதை

Image
உலகத்திலேயே கொடூரமான விஷயம் நட்பு என்கிற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்கள் தான். கட்டமைக்கப்படாத கலாச்சாரமாக காலங்காலமாக சலம்பிக்கொண்டிருக்கும் ஒரு உலகம் உண்டென்றால் அது நட்புவட்டம் தான். காரில் வந்து இறங்கியதும் என்னை தான் பார்த்தாள். கடைசியாக அவளிடம் அந்நியன் படத்தின் ரெமோ பாட்டை பற்றி பேசியபோது சண்டை போட்டு போனமாதிரி ஞாபகம். கோபத்தில் "சில்ற அளவுக்கு கூட காமன்சென்ஸ் இல்ல உனக்கு" என்று திட்டித்தீர்த்துவிட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் பைத்தியக்கார கதாபாத்திரங்களை விட பத்து மடங்கு முட்டாள்தனம் நிறைந்தவள். என்ன மனிதத்திற்கு இவளை நட்புவட்டத்தில் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. பழக்கவழக்கத்திற்காக விட்டுக்கொடுக்கமுடியாமல் பழக வேண்டியதாக இருக்கிறது. "காதல் யானை வருகிறான் ரெமோ, முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ, அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ, ராம்ப்வாக் ரெமோ… தூக்கத்தில் துரத்தும் டிராகன் ரெமோ, பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ, ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்க்டோன் ரெமோ, ரெயின்போ ரெமோ" இந்த வரிகளினால் எங்களுக்குள் எழுந்த வாக்குவாதம் விடிய வி...