வெற்றிடத்தின் பிரதிபலிப்பு - Spirited Away 2001
சிஹிரோ என்ற சிறுமி அவள் அம்மா அப்பாவுடன் புதிய வீட்டிற்கு செல்கிறாள். அந்த பயணத்தில் ஒரு மர்மமான உலகிற்குள் தவறுதலாக நுழைகிறாள். அந்த உலகம் சாதாரண மனிதர்களுக்கானது அல்ல. ஆவிகளின் உலகம். அங்கே மனிதர்கள் விதிகளை மீறினால் தங்கள் உருவத்தையும் அடையாளத்தையும் இழக்க நேரிடும். சிஹிரோவின் பெற்றோர் பேராசையால் பன்றிகளாக மாறிவிடுகிறார்கள். பேராசை மனிதனை மிருகமாக மாற்றும் என்பதை காட்டி குறியீட்டு திரைக்கதையை ஆரம்பிக்கும் படம் அதற்கப்பால் அடுத்தடுத்த காட்சிகளில் ஆயிரக்கணக்கான குறியீடுகளை வைத்து நகர்கிறது. சிஹிரோ தனது பெற்றோரை மீண்டும் மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த ஆவி உலகில் வேலை செய்ய ஆரம்பிக்கிறாள். யுபாபா என்ற சக்திவாய்ந்த சூனியக்காரியின் மாளிகையில் வேலைக்கு சேருகிறாள். யுபாபா என்பது அதிகாரம். கட்டுப்பாடு மற்றும் பேராசையை குறிக்கும் ஒரு பாத்திரம். அந்த மாளிகை ஒரு bathhouse. மனித சமுதாயத்தின் ஒரு சின்னமாக உள்ளது. அங்கே வரும் ஒவ்வொரு ஆவியும் மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது. சிலர் சுத்தமாக இருப்பார்கள். சிலர் மாசாக இருப்பார்கள். சிலர் தனிமையில் தத்தளிப்பார்கள். சிஹிரோ அ...