சோம்பேறியின் நினைவுச்சின்னம் - சிறுகதை
வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கிறேன். மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அறை. யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை? பாதி மொட்டைமாடி மீதி வீடு. ஒரு கயித்துக்கட்டில். இரவில் தாபாவில் பட்டர் நாண் சாப்பிடுவது போல பன்னீர் பட்டர் மசாலாவும் சிக்கன் 65யும் ஆர்டர் செய்து இரவு வானை ரசித்த படி சாப்பிடுவேன். 11 மணிக்கே இப்போதெல்லாம் சாப்பிட்டு விடுகிறேன். ஒருமணி இரண்டுமணி வரையெல்லாம் இப்போது எனது இரவுகள் செல்வதில்லை சுதாரித்துக்கொண்டது. இந்த நூறு சதுரடி அறைதான் இப்போது என் பிரபஞ்சம். ஒரு பழைய பேச்சிலர் ரூமாக இருந்தது. இதற்கு முன் இங்கே இருந்தவர்கள் செடி வளர்த்து மாட்டி பிரச்சனையாகி சண்டைபோட்டு வீட்டை காலி செய்து அதற்கு பின்னர் ஆறு மாதம் ஸ்டோர் ரூமாக வைத்து. வாடகை விடவே ஐடியா இல்லாத வீட்டு உரிமையாளரிடம் நான் பேசி இப்போது குடிபெயர்ந்து இருக்கிறேன். என்னுடைய பேச்சு திறமையை நினைத்து நான் வியக்காத நாளில்லை. ஆனால் எனது வாழ்வின் தோல்விகளுக்கும் இப்போது சொந்த வீட்டில் தங்காமல் இப்படி வாடகைக்கு தீப்பெட்டியின் ஒற்றை தீக்குச்சியாக தங்குவதற்கும் இந்த பேச்சு தான் காரணம். வீட்டு உரிமையா...