Posts

Showing posts from April, 2026

வண்ணமயமான திரைப்பட காவியம் - 2026 Cannes Film Festival

Image
கான் திரைப்பட விழா அமைப்பு 2026 போட்டியிடும் 21 படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. அத்தனை படங்களையும் இம்முறை பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய பத்து படங்களென நானொரு பட்டியல் போட்டிருக்கிறேன். தடைசெய்யப்பட்ட இயக்குனரான ஆன்ரே ஸ்வியகின்ஸேவின் MINOTAUR என்றொரு ரஷ்ய திரைப்படம். ஒரு தொழிலதிபர் தனது தொழிலிலும் குடும்பத்திலும் ஒரேநேரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி. அதிலிருந்து வெளிவரும் அரசியல் தான் கதை. லாட்வியாவில் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனரின் முந்தைய படமான LEVIATHAN எனக்கு மிகவும் பிடித்த படம் என்பதால் இதை மிகவும் உற்றுநோக்குகிறேன். இந்த இயக்குனரின் ஒவ்வொரு படமும் புட்டின் ஆட்சியின் மீதான கடுமையான விமர்சனமாக இருக்கும் . ஜேவியர் பார்டெம் நடித்திருக்கும் THE BELOVED. ஒரு பிரபல இயக்குனர் சஹாரா பாலைவனத்தில் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது தனது மகளை சந்திப்பதால் ஏற்படும் உறவு சிக்கல்களை பற்றிய கதை. ஸ்பானிஷ் சினிமாவின் ஒரு உளவியல் திரில்லர் கதை. நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர் தாமஸ் மன் இடிபாடுகள் கிடக்கும் ஜெர்மனி சாலைகளில் அ...

புடாக்கு கம்பி - சிறுகதை

Image
கொட்டிவாக்கத்தின் கடற்கரை, சென்னையின் பரபரப்பிற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு தனி உலகம். ஒருபுறம் பளபளக்கும் நவீன பங்களாக்கள், மறுபுறம் கொட்டிவாக்கத்தின் குப்பம். புதிதாக கட்டப்பட்ட ரசனையான வீடுகளும் இருக்கும் அதனுள் கடற்கரைக் உப்புக் காற்றில் தேய்ந்த பழங்கால வீடுகளும் இருக்கும். தேய்மான வீடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தெருக்களுக்குள் நடக்கும் போது இந்த பழமையை ரசித்தபடி தான் நடப்பேன் . பழைய ஜன்னல் டிசைன்கள் , வாசற்கதவுகள் , கூரைகள் , பால்கனிகள், கொள்ளைப்புறங்கள் என்று திருவான்மியூர் குப்பத்திலும் இதுபோல அழகிய பழமையான வீடுகள் இருக்கிறது . அவ்வப்போது வாடகைக்கு கேட்டுப்பார்ப்பேன் . கட்டுப்படி ஆகாது . கொட்டிவாக்கதில் கடற்கரையை ஒட்டி உள்ள பதினைந்தாவது பிரதான சாலையின் கடைசியில், ராசு தெருவில் , கடல் அலைகள் மோதுகின்ற சத்தத்திற்கு மிக அருகில் இருந்தது அந்த 'பச்சை வீடு'. அந்த வீட்டைச் சுற்றி ஒரு மர்மம் எப்போதும் நிலவி வந்தது. உரிமையாளர் சேகர். தனிவீடுகளுக்கு நடுவில் அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழைய பங்களா வீடு. அந்த வழியாக செல்லும் எவரையும் அழகில் கவர்ந்து இழுத்து ஒர...